இவர்கள் மட்டும் சுடுதண்ணீரில் குளிக்கக்கூடாது ….!!!

மருத்துவ ரீதியாக யாரெல்லாம் சுடுதண்ணீரில் குளிக்க கூடாது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

உடல் அசதி, உடல் வலி இருக்கும்போது சுடுநீரில் குளித்தால் அசதி, வலிகள் நீங்கும்.

பலபேர் பிறந்ததில் இருந்து சுடுநீரில் குளிக்கமாட்டார்கள். ஒரு சிலருக்கு சுடுதண்ணீரில் குளித்தால் உடல் உபாதைகள் ஏற்படாது.

ஆனால் ஒரு சில நோய் உள்ளவர்கள் சுடுநீரில் குளித்தால் அந்த நோய் பலமடங்கு பெருகிவிடும்.

உடலில் சரும பிரச்சனை, சொரியாசிஸ் உள்ளவர்கள் சுடுநீரில் குளிக்கக்கூடாது, இவர்கள் சுடுநீரில் குளித்தால் நோயின் தன்மை அதிகரிக்கும்.

அதேபோல் தலையில் பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் சுடுநீரில் குளிக்கக்கூடாது. சுடுநீரை அதிகஅளவு கொதிக்கவிட்டு குளிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் உடலில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

சுடுநீரில் குளிப்பது தவறில்லை. இதனால் பல நன்மைகளும் ஏற்படுகிறது. சுடுநீரில் குளித்தால் இரத்த நாளங்கள் விரிவடையும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் அதிகரித்து உடல் புத்துணர்ச்சி பெறும். ஆனால் வாழ்நாள் முழுவதும் சுடுநீரில் குளித்துவந்தால் சரும பிரச்சனை,கால்களில் வெடிப்பு ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகள் சுடுநீரில் குளித்து வந்தால் சருமத்தில் உணர்வுத்திறன் குறையும். ஆகவே தேவைப்படும்போது அதாவது குளிர்காலங்களில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது மட்டும் சுடுநீரில் குளிக்கலாம்.

கோடைகாலங்களில் பொடுகு பிரச்சனை, சரும பிரச்சனை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.