மாஸ்டர் பட பிரபலம் நடிகர் சஞ்சீவ் வீட்டில் இப்படி ஒரு ஸ்பெஷல்! நீங்களும் வாழ்த்து சொல்வீர்களா

மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர்களில் ஒருவர் நடிகர் சஞ்சீவ். இவர் விஜய்யின் நண்பரும் கூட. இதில் ஸ்ரீநாத், ஸ்ரீமன் என நண்பர்கள் கூட்டமே இணைந்து நடித்துள்ளது.

நடிகர் சஞ்சீவ் ஐ நமக்கு சீரியல், சினிமா நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நன்கு தெரியும். திருமதி செல்வம் சீரியல் அவருக்கு ஹிட் சீரியலாக அமைந்தது.

மாஸ்டர் படத்தை ஒரு ரசிகராகவும், நண்பராகவும் சஞ்சீவ் எதிர்பார்த்திருக்கிறார். நடிகை மீரா மிதுன் விஜய் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த சர்ச்சையின் போது கூட ரசிகர்களின் கேள்விக்கு சஞ்சீவ் விஜய்யின் ஸ்டைலில் Ignore Negativity என எளிமையாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சஞ்சீவின் மனைவி சீரியல் நடிகை பிரீத்தி என்பது பலரும் அறிந்ததே. பீரித்திக்கு இன்று பிறந்தநாளாம். இதற்காக அவர் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவிட்டிருந்தார். ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சஞ்சீவ் கண்மணி சீரியலில் நடித்து வருகிறார். அவருடன் சீரியலில் தற்போது காதல் சந்தியாவும் இணைந்துள்ளார். சஞ்சீவி விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தின் இசை வெளியீட்டுவிழாவை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/SanjeeveVenkat/status/1297360910328029186