ஹரிஸ் கல்யாண் உங்கள் எனக்கு பிடிக்கவே பிடிக்காது, நிறைய வெறுத்திருக்கேன்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் திரையில் தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். வில் அம்பு என சில படங்களில் நடித்திருந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம்.

அவரின் பண்புக்கு நிறைய ரசிகர்கள், ரசிகைகள் உருவானார்கள். பியார் பிரேமா காதல் படம் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதன் பின் கடந்த ஃபிப்ரவரியில் வந்த தாராள பிரபு படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

தற்போது கையில் சில படங்களை வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் போனதால் வீட்டிலிருந்து வரும் அவர் அண்மையில் போட்டோ ஷூட்டும் நடத்தினார்.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் “ஆரம்பத்தில உங்களை பிடிக்கவே பிடிக்காது, நிறைய வெறுக்க பட்டிருக்கிங்க But இப்போ உங்களை தான் ரொம்ப பிடிக்குது.

சினிமாவில சாதிப்பிங்களா தெர்ல அது ஆண்டவன் கையில், ஆனா நிறைய ரசிகர்களை, மனிதர்களை சம்பாதிப்பீங்க அது மட்டும் நிச்சயம்” என பதிவிட ஹரிஷ் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.