ஏன் நேற்று தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை? மீண்டும் பிரச்சனையா!!

தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் தனது கடின உழைப்பால் இடம் பிடித்து கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய்.

அதுமட்டுமின்றி தற்போதைய தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மற்றும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் தற்போது உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கூடிய விரைவில் கொரானா தாக்கம் குறைந்த பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது விஜய் படத்தை நடிக்க போகிறார்.

மேலும் இப்படத்தின் முழு பட்ஜெட் 130 கோடி என்றும், அதில் விஜயின் சம்பளம் 70 மற்றும் முருகதாஸ் சம்பளம் 10 என்றும் தெரியவந்தது.

விநாயகர் சதுர்த்தி நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என சன் நியூஸ் தொலைகாட்சியில் கூறினார்கள்.

ஆனால் எதிர்பார்த்தபடி நேற்று எந்த ஒரு அறிவிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவர வில்லை.

இந்நிலையில் மீண்டும் ஏதாவது சம்பளம் சர்ச்சைகள் வந்துள்ளதா என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டடு வருகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிபிற்காக.