கொரொனா பற்றி கவலையில்லை, வலிமைக்காக அஜித் அதிரடி

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரவுள்ளது. இந்நிலையில் வலிமை கொரொனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என பலர் எதிர்ப்பார்த்து வருகின்றனர். அஜித் கொரொனா முற்றிலும் ஒழிந்தால் தான் படப்பிடிப்பு வருவேன் என்று கூறியதாக ஒரு செய்தி வெளிவந்தது.

ஆனால் சினிமா பிரபலம் ஒருவர் வலிமை டீமுடன் பேசிய போது, அரசாங்கம் என்று பெர்மிஷன் கொடுக்கிறதோ அடுத்த நாள் அஜித் சார் படப்பிடிப்பு கிளம்பிவிடுவார்.

அவர் தயாரிப்பாளர் பணத்தை ஒரு போதும் வீணடிக்க மாட்டார், அதனால் கொரொனா அச்சம் பெரிதும் இல்லை, அரசாங்கத்தின் பெர்மிஷினுக்கு தான் அஜித் வெயிட்டிங் என்று கூறியுள்ளார்.