தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதில் டாக்டர் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்தியளவில் டாப் 50 லிஸ்டில் 50வது இடத்தை பிடித்துள்ளார், இந்த லிஸ்டில் விஜய், அஜித் என எந்த முன்னணி நடிகர்களும் இல்லை.
துல்கர் சல்மான் 6ம் இடத்தை பிடிக்க, விஜய் தேவரகொண்டா 4வது இடத்தை பிடித்துள்ளார்.
அதோடு நிவின் பாலி 40வது இடத்தை பிடித்துள்ளார், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தான் டாப் 50 லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளார்.







