காக்க காக்க படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சூர்யா கிடையாது!! இந்த டாப் ஹீரோ தான்

தமிழ் சினிமா மாபெரும் மடைபுக்களில் ஒன்று கௌதம் மேனன் இயக்கி சூர்யா ஜோதிகா இணைந்து நடித்து வெளிவந்த காக்க காக்க திரைப்படம்.

இப்படம் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ரீதியாகவும் வெற்றியடைய செய்தது.

சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் மேனன். காக்க காக்க படங்களை பற்றி சில ருசிகர விஷங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒன்றாக கௌதம் மேனன் கூறியது : காக்க காக்க படத்தின் கதையை முதலில் நான் ஜோதிகாவை சந்தித்து தான் கூறினேன்.

அவர் தான் இந்த படத்தில் அஜித், விக்ரம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அதன்பின் நான் அஜித்துக்கும், விக்ரமுக்கும் கதையை கூறினேன்.

ஆனால் சில பலவேறு பிரச்சினைகளால் இந்த படத்தில் அஜித், விக்ரம் நடிக்க முடியாமல் போனது. என கூறினார் இயக்குனர் கௌதம் மேனன்.