பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா!

பிரபல தெலுங்கு நடிகரான ராணா டகுபதிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களில் வில்லனாக நடித்து இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.

மேலும் இவர் தல அஜித்தின் ஆரம்பம் திரைப்படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவருக்கும் மிஹிக்கா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது முடிந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகை சமந்தாவும் அவரின் கணவர் நாக் சைதன்யா உடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்.

தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..