10வது தலைமுறை புரோசசருடன் அறிமுகமாகின்றது புதிய 27-inch iMac

ஆப்பிள் நிறுவனத்தின் iMac சாதனங்களுக்கு தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகின்றமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் தற்போது மற்றுமொரு புதிய iMac சாதனத்தினை ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளது.

இச் சாதனத்தில் 10வது தலைமுறைக்குரிய Intel Core processors உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 27 அங்குல திரையினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இதில் 8 TB SSD சேமிப்பகத்தினை நிறுவும் வசதி தரப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இன்று முதல் இச் சாதனத்தினை கொள்வனவு செய்ய முடியும்.

இதன் விலையானது 1,799 டொலர்களில் இருந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.