இந்தியாவில் மிகப்பெரிய ரோபோட்டிக் ஆய்வுகூடத்தை திறக்கும் நோக்கியா

மொபைல் உற்பத்தியில் மிகவும் பிரபல்யமான நிறுவனமாக அனைவராலும் அறியப்பட்டது நோக்கியா ஆகும்.

இந்நிறுவனம் மொபைல் உற்பத்தி தவிர்ந்த ஏனைய தொழில்நுட்ப சாதன உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது.

இப்படியிருக்கையில் தற்போது ரோபோட்டிக் ஆய்வுகூடம் ஒன்றினை இந்தியாவில் உருவாக்கவுள்ளது.

இது பெங்களூரில் உள்ள Indian Institute of Science (IISc) இல் அமையவுள்ளது.

இங்கு மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப சாதனங்கள் உட்பட ரோபோக்களை தாயரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.