அநுராதபுர மாவட்டத்தின் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் அநுராதபுர மாவட்டத்தின் அநுராதபுரம் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான அநுராதபுரம் – அநுராதபுரம் மேற்கு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,075

ஐக்கிய மக்கள் சக்தி – 17,128

தேசிய மக்கள் சக்தி – 3,074

ஐக்கிய தேசிய கட்சி – 915

சுயேட்சை குழு 09 – 220

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,280

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 103,439

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 80,015

செல்லுபடியான வாக்குகள் – 74,692

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,323

இதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.