இங்கிலாந்துக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து: அசத்தல் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் கடைசி ஓவரில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்று பட்டையை கிளப்பியது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.

முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற உலக சாம்பியனான இங்கிலாந்து அணி 2-0 என ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பார்வையாளர்கள இன்றி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடந்தது.

நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்து வீச முடிவு செய்தது, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அணித்தலைவர் மோர்கன் சதம் அடித்து அசத்தினார். அயர்லாந்து தரப்பில் பந்துவீச்சில் கிரேக் யங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

329 ஓட்டங்கள் எடுத்தால் வென்ற என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கி விளையாடியது. கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

49வது ஓவரின் 5வது பந்தில் வெற்றி இலக்கை எட்டி இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றிப்பெற்றது.

அயர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர் Paul Stirling 128 பந்துகளில் 6 சிக்ஸர், 9 பவுண்டரி என 142 ஓட்டங்கள் குவித்தார். மறுபுரம் அயர்லாந்து அணித்தலைவர் Andrew Balbirnie 113 குவித்தார்.

தொடரை முன்னரே இங்கிலாந்து வென்றிருந்தாலும் 3 போட்டிகள் முடிவில் 2-1 என தொடரை இழந்து அயர்லாந்து ஆறுதலடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை சேஸ் செய்து வெற்றிப்பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து படைத்துள்ளது.