உடல் எடை கூடுவதற்கு காரணம் என்ன??

இன்றைய காலத்தில் ஆண் பெண் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது அதித உடல் பருமன் தான்

இந்த அதிகப்படியான பருமன் காரணமாக அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடுகிறது.

நம்மை யாராவது கேலி, கிண்டல் செய்வார்களோ என வெளியே போவதை தவிர்பவர்களும் உள்ளார்கள்.

எதனால் இந்த உடல் பருமன் உண்டாகிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

பொதுவாக நம் உடம்பிற்கு 3 விதங்களில் சக்தி கிடைக்கிறது. அவை,

கார்போஹைட்ரேட் – மாவுச்சத்து உள்ள உணவுகள்.அவை தானியங்கள்,பருப்பு வகைகள்,தீனி வகைகள்,இனிப்புகள்,பழங்கள் இவை அனைத்தும் மாவுச்சத்துள்ள உணவுகள்.

கொழுப்புச்சத்து – இறைச்சி,நெய் ,பால் பொருட்கள் உள்ளிட்டவைகள் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளாகும்.

புரதச்சத்து – முட்டை, இறைச்சி வகைகள்

இந்த 3 சத்துள்ள உணவுகளை நாம் உண்ணும்போது அது ஜீரணமாகி எரிசக்தியாக மாறி நமக்கு energy கிடைக்கிறது.

அதே நாம் அதிகமாக உண்ணும்போது தேவைக்கு அதிகமான எரிசக்தி வெளிவருவதால் நம் உடம்பில் கொழுப்பு படிந்து உடல் பருமன் ஏற்படுகிறது.

ஒரு சிலருக்கு அவர்களின் மரபணு உடல் எடையை தீர்மானிக்கும். மரபணு கோளாறு காரணமாகவும் உடல் எடை கூடும்.

உணவு முறையும் உடல் பருமனை தீர்மானிக்கும். தேவையான கலோரிகளுக்கு அதிகமாக உண்பதால் உடல் எடை கூடும்.

மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாவுச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது நம் உடலில் இன்சுலின் அதிகமாக சுரக்கப்பட்டு பசியை சீக்கிரமாக தூண்டும்.

ஆகவே உடல் பருமன் உள்ளவர்கள் மாவுச்சத்துள்ள உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள