நடிகர் சுஷாந்த் சிங்-ன் Dil Bechara படத்தை ஒரே நாளில் இத்தனை கோடி பேர் பார்த்தார்களா!

பாலிவுட் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக இருந்தவர், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் நடிப்பில் வெளியான அணைத்து திரைப்படங்களுமே நல்ல வரவேற்பையும், விமர்சங்களை பெற்ற திரைப்படங்கள் தான்.

மேலும் குறிப்பாக கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான M.S.தோனி திரைப்படத்தின் மூலம், இவர் இந்திய அளவில் பிரபலமானார்.

ஆனால் திடீரென்று நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.

மேலும் இவர் இறப்பதற்கு முன் நடித்த திரைப்படமான Dill Bechara திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் உண்மையில் ஹாலிவுட்டில் வெளியான ‘The Fault in Our Stars’ என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தை முதல் நாளிலேயே சுமார் 75 மில்லியன் பேர் பார்த்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இவை அனைத்தும் ரசிகர்கள் சுஷாந்திற்கு அளித்த டிரிபியூட்டாக தான் பார்க்கப்படுகிறது.