வனிதா பிரச்சனை தான் கடந்த சில வாரங்கள் ஹாட் டாபிக். அவர் எங்கு சென்றாலும் என்ன சொன்னாலும் விவாதங்களாக தான் இருந்து வந்தது.
இந்நிலையில் வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த்ததை கடுமையாக லட்சுமி மற்றும் கஸ்தூரி எதிர்த்தனர்.
இதை தொடர்ந்து சூரியா தேவி என்பவர் இதற்குள் வந்தார், பிறகு தான் பிரச்சனை இன்னும் பெரிதானது.
சூரியா தேவி மோசமான வார்த்தைகளால் வனிதாவை தாக்க, வனிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்போது நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் எல்லோருக்கும் ஷாக் தான்







