ரஜினி, அஜித் சம்மதித்தும் விஜய் இன்னும் சம்மதிக்கவில்லை, ஏன்?

தமிழ் சினிமாவின் உச்ட நட்சத்திரங்கள் ரஜினி, அஜித், விஜய். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் மிகப்பெரிய வரவேற்பு பெறும்.

அதிலும் விஜய், அஜித் படங்கள் என்றால் இளைஞர்கள் கூட்டம் அலை மோதும், அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளவர்கள்.

இந்நிலையில் தற்போது கொரொனா காரணமாக இவர்கள் படப்பிடிப்பு நின்றும், படத்தின் ரிலிஸ் தள்ளிபோயும் உள்ளது.

கொரொனா பிரச்சனைகள் முடிந்து மாஸ்டர் ரிலிஸ் இருக்க, அண்ணாத்த, வலிமை படப்பிடிப்பு தொடங்கும்.

இதில் கொரொனாவிற்காக அஜித், ரஜினி சம்பளம் விஷயத்தை குறைக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆனால், விஜய் தற்போது வரை சம்பளத்தை குறைக்கவில்லை என கூறப்படுகிறது, சம்பளம் அதிகம் கொடுக்காததால் சன் பிக்சர்ஸ் படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் வருகிறது.

எது உண்மை என்று தெரியவில்லை, ஆனால், விஜய் தன் சம்பளம் குறித்து எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.