iPhone 12 கைப்பேசியில் தரப்படவுள்ள அட்டகாசமான சிறப்பம்சம்

ஆப்பிள் நிறுவனம் இவ் வருடம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

வழமைபோன்று இவ் வருடமும் செப்டெம்பர் மாதத்தில் குறித்த கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் iPhone 12 கைப்பேசிகள் தொடர்பான சில தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி இக் கைப்பேசிகளில் பிரதான நினைவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

அதாவது பிரதான நினைவத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி iPhone 12 கைப்பேசியில் பிரான நினைவகமாக 4GB RAM மற்றும் iPhone 12 Pro கைப்பேசியில் பிரதான நினைவகமாக 6GB RAM என்பன தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த கைப்பேசிகளில் Apple A14 Bionic processor மற்றும் iOS 14 இயங்குதளம் என்பனவும் தரப்படலாம் என நம்பப்படுகின்றது.