சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, உடனடி நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த தகவல் வெறும் புறளி என்பதை கண்டறிந்தனர்.
இதன் பின்னர், 108க்கு போன் செய்து மிரட்டல் விடுத்தது யார் என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டியது கடலூரை சேர்ந்த 14 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது.
8ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது, அதை தொடர்ந்து போலீஸார் சிறுவனின் பெற்றோரிடம் அறிவுரை கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.