உடற்பயிற்சியில் ஈடுபட முன் உடலை உடற்பயிற்சிக்கு ஏற்பத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
அவ்வாறு செய்வதால் தசைப்பிடிப்பு, எலும்பு, மூட்டுப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உடலைக் காத்து கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கட்டுமஸ்தான உடல் வேண்டும் என நினைப்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்கள் கால்களை கவனிப்பது சிறந்தது.
ஓடுவது, சைக்கிளிங் செய்வது, ஜாகிங் போவது போன்ற உடற்பயிற்சிகள் கால்களை முழுமையான வலுவாக்காதாம் எனவே, கால்களை வலுவாக்க, செய்ய வேண்டிய பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதேபோல் உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல மாறாக அது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டுமானால், முதலில் உங்களுக்கு பிடித்த பயிற்சிகளை செய்யுங்கள்,
அதற்காக உடல் சோர்ந்து போகும் படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருக்காதீர்கள்.
எந்தப் பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம்.
வருத்திக் கொண்டு பயிற்சி செய்யும் போது, உடல் சோர்வடைவதால் உற்சாகமும் விரைவில் குறைந்துபோய் உடற்பயிற்சியையே கைவிட நேரிடும்
உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிட வேண்டியது
சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும்.
காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும்.
அந்த வகையில், வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே…
- ஆப்பிள்
- ஆரஞ்சு
- பேரிக்காய்
- பப்பாளி
- பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி
- ஓட்ஸ்
- தயிர்
- கிரீன் டீ
- நட்ஸ்.
உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிட வேண்டியது
உடற்பயிற்சிக்குப் பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும்.
பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள்.
அவர்கள், அவற்றுக்குப் பதிலாக தண்ணீர், இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்யும் போது
உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம்.
தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது.
கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.