இந்தியாவில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற இளம் வயதான இரு சகோதரிகள் காணாமல் போனது குடும்பத்தாரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் டிம்பர் கிராமத்தை சேர்ந்தவர் யாமினி (17). இவர் சகோதரி சன்வி (15).
இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் Rajgarh நகருக்கு செல்வதாக கூறிவிட்டு பேருந்தில் வந்தனர்.
பின்னர் யாமினி, சன்வி மாயமாகியுள்ளனர், இருவரும் இரவு வரை வீடு திரும்பாததால் பெரும் அச்சமடைந்த குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், யாமினி, சன்வியின் தந்தைக்கு Rajgarh-லும் ஒரு வீடு உள்ளது. ஆனால் அங்கு இருவரும் செல்லவில்லை, எங்கு மாயமானார்கள் என இன்னும் தெரியவில்லை.
இளம் வயது சகோதரிகள் மாயமானது அவர்கள் குடும்பத்தாரை பெரும் கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இருவரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளோம். சமூகவலைதளங்கள் மூலமாகவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
அவர்கள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.







