இறந்த கால்பந்தாட்ட நண்பனின் சவப்பெட்டி அருகில் கோல் அடித்து உருகிய நண்பர்கள்.. வெளியான வீடியோ!

அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வந்தவர் அலெக்ஸாண்டர் மேட்ரினஸ். இரட்டைக் குடியுரிமை பெற்றவரான இவர், கடந்த வியாழன் அன்று நண்பர்களுடன் கால்பந்து விளையாண்டுகொண்டிருந்த இவர், சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால், இவரை காவல்துறையினர் தவறுதலாக சுட்டுக் கொன்றதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில், 16 வயதேயான அலெக்ஸாண்டரின் இறுதிச் சடங்கில், அவரது நண்பர்கள் கால்பந்தினை எடுத்துவந்து, அவரது சவப்பெட்டியினால் கோல் அடிக்கும்படி செய்த நிகழ்வு பார்ப்பவர்களை கலங்கவைத்தது.

அதன் பின்னர் இவரது சவப்பெட்டியினை நண்பர்கள் சேர்ந்து அடக்கம் செய்ததோடு,இவரது பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.