மனம் விட்டு அழுது வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகர்!

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். பலரும் வேலையை இழந்து வறுமையில் வாடும் நிலைக்கு வந்துள்ளனர்.

சினிமா தொழிலாளர்கள் பலருக்கும் பிரபலங்கள் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் ஹிந்தி சீரியலை சேர்ந்த நடிகர் ராஜேஷ் கரீர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உங்களால் முடிந்த ரூ 300, 400 அனுப்புங்கள். தாழ்மையுடன் கேட்கிறேன். ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என தெரியவில்லை. வாழ்க்கை அப்படியே நின்றுவிட்டது. எதையும் புரிந்துகொள்ள இயலவில்லை. வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார்.

இதனால் அவருடன் பணியாற்றிய நடிகை சிவாங்கி உடனே அவரின் வங்கி கணக்கிற்கு ரூ 10 ஆயிரம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் அவர் சிவாங்கிக்கும் எனக்கும் நெருக்கம் கிடையாது. இருந்தாலும் அவர் என் நிலையை புரிந்து கொண்டு உதவி செய்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரசிகர்களும் பண உதவி செய்து வருகின்றனர். அனைவருக்கும் நன்றி என மகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர்.