ஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்

இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளமை அனைவரும் அறிந்ததே.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழமைக்கு மாறாக இக் கைப்பேசி அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐபோன் 12 கைப்பேசிக்கு தேவையான OLED திரையினை சாம்சுங் நிறுவனமே ஆப்பிளிற்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 4 வகையான ஐபோன் 12 கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ளது.

இந் நான்கு கைப்பேசி வகைகளுக்கும் தேவையான சுமார் 80 சதவீதமான OLED திரைகளை சாம்சுங் நிறுவனம் வழங்கவுள்ளது.

எஞ்சிய 20 சதவீதமான தொடுதிரைகளை ஆப்பிள் நிறுவனம் தானே வடிவமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.