iPhone SE 2020 கைப்பேசியில் Screenshot எடுப்பது எப்படி?

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் iPhone SE 2020 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

ஐபோன் பிரியர்கள் ஓரளவு குறைந்த பட்ஜெட்டில் கொள்வனவு செய்யும் முகமாகவே இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இக் கைப்பேசியில் இரு வகையாக Screenshot எடுத்துக்கொள்ள முடியும்.

அவற்றில் ஒன்று பௌதீக முறை (Physical Buttons) மற்றையது Assistive Touch முறையாகும்.

பௌதீக முறையில் Screenshot பெற்றுக்கொள்வதற்கு Power பொத்தான் மற்றும் Home பொத்தான் என்பவற்றினை ஒருங்கே அழுத்த வேண்டும்.

மாறாக Assistive Touch முறையைப் பயன்படுத்துவதற்கு இதனை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

Settings பகுதிக்கு சென்று Accessibility என்பதில் Touch இனை தெரிவு செய்து Assistive Touch என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Screenshot தேவைப்படும் சமயங்களில் Assistive Touch பொத்தானை அழுத்தி Device என்பதில் உள்ள 3 புள்ளிகளை அழுத்தி Screenshot என்பதை கிளிக் செய்யவும்.