அமெரிக்காவை தொடர்ந்து அதிர்ச்சி தரும் பிரேசில், ரஷ்யா… அச்சத்தில் மக்கள்

இந்த உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தினமும் மக்களை கொன்று குவித்து வருகிறது. உலகளவில் இந்த நோயை கட்டுப்படுத்த இயலாமல், உலக நாடுகள் திணறி வருகிறது. மேலும், இந்த வைரஸை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான தடுப்பூசி கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு 5,403,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 343,975 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2,247,230 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷியா நாடுகளின் பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது. மேலும், பிரேசில் மற்றும் ரஷிய நாடுகள் உலகளவிலான பாதிப்பில் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது.

அமெரிக்க நாட்டில் 1,666,828 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 1,036 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 98,683 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் 347,398 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 965 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 22,013 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யா நாட்டில் 335,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 139 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,388 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் 257,154 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 282 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 36,675 ஆக உயர்ந்துள்ளது.