குடலை சுத்தம் பண்ணணுமா?

இப்பொழுது எல்லாரும் பீட்சா, பர்கர், சிக்கன் என்று எதையாவது சாப்பிடுகிறோம். இதனால் கொழுப்பு உடலில் சேர்வதால் உடல் பருமன், குடல் ஆரோக்கியம் எல்லாம் கெட்டு போகும்.

குடலில் தங்கும் உணவு நச்சுக்களால் சிலருக்கு சீக்கிரமே குடல் புற்று நோய், மலம் கழிக்கும் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.

நம் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் உணவு நன்றாக செரிக்கப்படும். ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்படும். மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.

இயற்கை முறையில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாமல் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு, உப்பு போன்ற நச்சுக்களை வெளியேற்ற என்ன செய்யலாம்:

  • மலச்சிக்கல், தலைவலி, முழங்கால் வலி, உடல் எடை அதிகரிப்பு, வாந்தி, வயிற்று போக்கு, மன அழுத்தம், இதை நீங்கள் கண்டுக்காமல் விடும் போது அவை பித்த பை கற்கள், ஆஸ்துமா, இதய நோய்கள், சிறுநீரக கல்லீரல் நோய், சரும அழற்சி இவற்றை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
  • இதை அறுவை சிகிச்சை இல்லாமல் எனிமா போன்ற இயற்கை முறை மாதிரி கொண்டு வெளியேற்றலாம்.
  • நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் தண்ணீர் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. எனவே காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் சூடான நீர் குடிப்பது உங்க வயிற்றில் கழிவுகளை எளிதாக வெளியேற்றும். அதில் கொஞ்சம் தேன், லெமன் சேர்த்து கொண்டால் மெட்டாபாலிசத்தை அதிகரித்து குடல் நச்சுக்களை வெளியேற்றும். ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
  • தண்ணீரின் மூலமாக உடலையும் உள்ளுறுப்புகளையும் சுத்தம் செய்யும் முறை மிகவும் சிறந்தது. அதனால் காலையில் வெறும் வயிற்றில் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் வரை கூட தண்ணீர் குடிக்கலாம்.
  • தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உங்க குடல் சுத்தமாகும். காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுவையான ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.
  • லெமன் ஜூஸில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறையவே உள்ளது. லெமன் ஜூஸ், உப்பு, தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து காலையில் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் குணமடையும்.
  • ராஸ்பெர்ரி, போர்கள், ஆப்பிள்கள், கூனைப்பூக்கள், பட்டாணி, ப்ரோக்கோலி, முதலியன. தானியங்கள், கொட்டைகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் விதைகள் போன்ற நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்க குடலை எளிதாக சுத்தம் செய்து குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
  • கேரட், வெள்ளரி, முட்டைக்கோசு, ப்ரோக்கோலி, வோக்கோசு, பீட்ரூட், தக்காளி, கீரை போன்ற காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த காய்கறிகளிலிருந்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். குடலில் உள்ள கழிவுகள் நீங்கி எடை குறையும்.
  • கற்றாழை இலையில் உள்ள சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து ஒரு நாளைக்கு பல முறை குடித்து வர மலச்சிக்கல் சரியாகும். சரும ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் இரைப்பைக் வலி அனைத்தும் போகும்.
  • இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து வந்தால் குடல் சுத்தமாகும்.
  • ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் ஒரு நாளைக்கு 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.
  • நம் குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் சரியாகும்.
  • கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.
  • ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் குடல் சுத்தமாகும்.
  • குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.
  • அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
  • கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வைக்கும்.