பேஸ்புக், யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்பவரா நீங்கள்?

தற்போதுள்ள லொக்டவுன் நிலையில் பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோக்களும் அதிகமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வாறான வீடியோக்களில் அனேகமானவை எந்தவித ஆதாரமுமற்றதாகவே காணப்படுகின்றது.

இவை பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

எனவே இவ்வாறான வீடியோக்களை அகற்றவுள்ளதாக பேஸ்புக் மற்றும் யூடியூப் என்பன தெரிவித்துள்ளன.

இவ் வகை வீடியோக்கள் மக்களை தவறாக வழிநடாத்துவதுடன், அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.

இதன் காரணமாகவே இந்த முடிவுக்கு குறித்த இரு நிறுவனங்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.