பிரித்தானியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரித்தானிய பொருளாதாரம் இந்த ஆண்டில் 14 சதவீத சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது கடந்த 300 ஆண்டுகளில் நாடு சந்தித்திராத மிக மோசமான நிலை என தேசிய வங்கி எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு உலகின் பெரும்பாலான நாடுகள் நீண்ட கால ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

முக்கிய நாடுகள் சில தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், நெறிமுறைகளுடன் ஊரடங்கை தளர்த்த ஆயத்தமாகி வருகிறது.

எதிர்வரும் திங்கள் முதல் பிரித்தானியாவிலும் ஊரடங்கை தளர்த்த போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் தேசிய வங்கி, பொருளாதாரம் தொடர்பில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிரித்தானிய பொருளாதாரம் இந்த ஆண்டில் 14 சதவீத சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான சரிவு என அது எச்சரித்துள்ளது.

நாட்டின் வேலையின்மை வீதம் 8 சதவீதத்தை எட்டும் எனவும் தெரியவந்துள்ளது. இதற்கு கொரோனாவால் சரிவடைந்த வேலைவாய்ப்பும், வருவாய் இழப்புமே காரணமாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானிய பொருளாதாரம் ஒரு சகாப்தத்திற்கு பின்னர் அதன் முதல் மந்தநிலையை எதிர்கொள்ள இருப்பதாகவும் இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது.

மேலும், சமீபத்திய வாரங்களில் நுகர்வோர் செலவினம் 30% குறைந்துவிட்ட நிலையில், குடியிருப்பு தொடர்பான சந்தை ஸ்தம்பித்துள்ளது என இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு என்பது பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 9,000 பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்துவதற்கு நிகரானது என ஜேம்ஸ் ஸ்மித் என்ற பொருளாதார ஆய்வாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.