வெறும் வயிற்றில் இதை ஊற வைத்து குடிங்க? இவ்வளவு நன்மைகளா?

உலர் திராட்சையை நீரில் ஊற வைக்கும் போது, திராட்சை மற்றும் அதன் தோலில் உள்ள அனைத்து கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நீரில் கரைந்துவிடும்.

அதை வெறும் வயிற்றில் குடிப்பதால் நன்மைகள் கிடைக்கும்.

இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

  • உலர் திராட்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, அது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.
  • இந்த நீர் கல்லீரலில் பயோகெமிக்கல் செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்யவும் உதவும். மொத்தத்தில் இந்த நீரை கல்லீரலை எளிதில் சுத்தம் செய்யக்கூடியது.
  • நீங்கள் அசிடிட்டி பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவராக இருந்தால் உலர் திராட்சை தண்ணீர் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
  • காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை ஒருவர் குடிக்கும் போது, அது வயிற்றில் அமிலச் சுரப்பை சமநிலையில் பராமரிக்கும்.
  • உலர் திராட்சை நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்திருக்கும். இந்த நீரை அன்றாடம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
  • கொரோனா வைரஸ் பரவும் இந்த காலத்தில் வலுவான நோயெதிர்ப்பு சக்தி அவசியம் என்பதால், இந்நீரை தினமும் குடிப்பது மிகவும் நல்லது.