சூப்பர் ஸ்டாரின் மாஸான வசனம் பாடலாக! ஆட்டம் போட்ட ஐஏஎஸ் பெண் அதிகாரி..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் படங்கள் என்றால் மாஸ் ஓப்பினிங் தான். விளம்பரம் பிரம்மாண்ட அளவில் இருக்கும்.

அவரின் முந்தய படங்களில் எல்லோராலும் இன்று கொண்டாடப்படுவது பாட்ஷா. இதில் உள்ளே போ என்ற மாஸான வசனம் மிகவும் பிரபலம்.

தற்போது கொரோனாவால் ஊரடங்கு நிலவி வருகிறது. இந்நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளே போ என்ற வார்த்தையை கொண்டு பாடலை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் தாஜ் நூர்.

இப்பாடல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் மூன்று வரிகளை அவரே எழுதிவிட்டு பின் கவிஞர் இனியவனிடம் கொடுத்துவிட்டாராம். இப்பாடலுக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு நடனமாடிள்ளார்.