புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொய்யாகுளம் வினோபா நகர் பகுதியை சார்ந்தவர் உமாராணி (வயது 29). விர் புதுச்சேரியில் இருக்கும் சட்டக்கல்லூரி அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், முத்தியால்பேட்டை பகுதியை சார்ந்த வாலிபரும் பல வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் இருவரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இரு வீட்டாரின் தரப்பிலும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், காதலன் வீட்டின் சார்பாக திடீரென திருமண பேச்சுவார்த்தை மற்றும் ஏற்பாடுகளில் இருந்து பின்வாங்கியதாக தெரியவருகிறது. உமாராணி தனது காதலனிடம் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார்.
இதனால் இவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. இதில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான உமாராணி தற்கொலை செய்ய முடிவு எடுத்து மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







