தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மாஸ்டர் படத்தின் ரிலிஸ் தள்ளி சென்றுள்ளது.
விஜய் தன் திரைப்பயணத்தில் கில்லி படத்தின் மூலம் அடுத்தக்கட்டத்தை எட்டினார். இப்படம் ரசிகர்களிடம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது.
அந்த வகையில் கில்லி பாக்ஸ் ஆபிஸில் செம்ம ஹிட் அடித்தது, ரூ 7 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டது.
ஆனால், இப்படத்தின் வசூல் ரூ 41 கோடிகளுக்கு மேல் வந்து செம்ம லாபத்தை எல்லோருக்கும் கொடுத்தது.







