பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. பல படங்கள் நடித்தும் நல்ல கதையை தேர்தெடுத்தால் தான் அந்த இடத்தை பெற முடியும். ஆனால் குறுகிய காலகட்டத்தில் பாலிவுட் சினிமாவையே தன்னுள் அடக்கி வைத்தி வருபவர் தான் நடிகை ஆலியா பட்.
27 வயதே ஆன ஆலியாபட் பத்து வருடங்களுக்கு முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார். அடுத்தடுத்த படங்கள் மூலம் பாலிவுட் சினிமாவில் நடித்து பிஸி நடிகையாக இருந்தும் வருகிறார்.
கொரானா வைரஸால் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனிமையில் வீட்டில் இருக்கும் நிலையில் ஆலியா பாட்டும் தனிமையில் இருந்து வருகிறார். சமீபகாலமாக முன்னணி நடிகர் ரன்பீர் கபூரை வைத்து சில கிசுகிசுக்களும் பரவி வருகிறது. இருவரும் காதலில் இருப்பதாகவும் ஜோடியாக வெளியில் செல்வதுமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஆலியாவின் ஒரு புகைப்படம் சமுகவலைத்தளத்தில் பரவி கேலிகிண்டலுக்கு ஆளாகியுள்ளது. படுசோகத்தோடு படுக்கையறையில் இருப்ப்பது போன்ற புகைப்படம் தான் அது. கொரானாவால் பாதிக்கப்பட்டது போல் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் மீம்ஸ் செய்தும் வருகிறார்கள்.
Quarantine mood be like… #AliaBhatt pic.twitter.com/KCaTALy9ST
— Filmfare (@filmfare) April 15, 2020







