பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது பெற்றோரின் சம்மதம் இன்றி நடன இயக்குனர் ஒருவரை காதலித்து கரம் பிடித்தார்.
ஆனாலும், இவர்களின் வீட்டிற்கு இந்த காதலில் உடன்பாடு இல்லை. ஆகவே, இப்போது தனது கணவருடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின்பேரில் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் வருகிற 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வெளியூர் சென்ற சில நபர்கள் வீடு திரும்ப முடியாமல் திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்று உள்ளார்.
இதனால் தனது வீட்டிற்கு திரும்ப முடியாமல் ஒரு கிராமத்தில் மாட்டிக்கொண்டு உள்ளார். அங்கு இருந்தபடியே அந்த கிராமத்தின் குழந்தைகள் உடன் விளையாடுவது, முறுக்கு சுடுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில், தற்போது கிராமத்தில் உள்ள ஒரு சின்ன பெண்ணுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறி சாலையில் விழுந்து விட்டார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மணிமேகலை அடுத்த விளையாட்டில் அவளை பழி வாங்கியே தீருவேன் என்று உறுதி ஏற்று உள்ளார்.
இந்த வீடியோவிற்கு ஏராளமான விருப்பங்களும் குவிந்துள்ளன. அதேவேளையில் கண்டபடி கருத்து தெரிவித்து வருகிறார்கள் இணையதள வாசிகள்.







