கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் பல மேலை நாடுகளும் கரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி பெரும் இழப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவிலும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது.
இதனையடுத்து இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற பணிகளுக்கு மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இந்தியா முழுவதும் கரோனா வைரசை கட்டுக்குள் வைக்கும் பல அதிரடி நடவடிக்கைகள் மற்றும் தேவையான விழிப்புணர்வுகள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்துள்ளது. 308 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 857 பேர் சிகிச்சை முடிந்து பூரண நலனுடன் இல்லங்களுக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலத்தில் 1,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 804 பேரும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 804 பேரும், குஜராத் மாநிலத்தில் 516 பேரும், தெலுங்கானா மாநிலத்தில் 504 பேரும், உத்திர பிரதேசம் மாநிலத்தில் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பலி எண்ணிக்கையை பொறுத்த வரையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 127 பேரும், டெல்லியில் 24 பேரும், தமிழகத்தில் 11 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 36 பேரும், குஜராத் மாநிலத்தில் 24 பேரும், தெலுங்கானா மாநிலத்தில் 9 பேரும், உத்திர பிரேதசம் மாநிலத்தில் 5 பேரும் பலியாகியுள்ளனர்.







