மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.. செம மாஸ் தகவல்..!!

தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் தான் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படம் உலகவில் மிக சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

இவர் இப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் லூசிபர்.

தற்போது இபபடத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் சிரஞ்சீவி நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவர் இதற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த கத்தி படத்தை தனது 150 படமாக ரீமேக் செய்து நடித்தது குறிப்பிடத்தக்கது.