மலையாள திரையுலகில், 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன். அதன் பின் தொடந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்த இவர், விஜய் சேதுபதியுடன், சேதுபதி படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். நடிகை என்பதை தாண்டி பாடகி, இயக்குநர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில், தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் பல பிரபலங்கள் வீட்டிலிருந்தபடியே புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ரம்யா நம்பீசனும், வீட்டிலிருந்த படி புன்னகையுடன் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும், அழகை வர்ணித்து புகழ்ந்து வருகிறார்கள்.







