மலையாளம், தமிழ் மற்றும் இந்தி மொழிகள் என மிகவும் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் பிரித்வி ராஜ். இவர் சமீபத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.
ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம் என்ற பாலைவனப்பகுதியில் இந்த படத்திற்கான படபிடிப்புகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டது. அதே போன்று ஜோர்டான் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும் படப்பிடிப்பிற்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. ஆனால் 27ம் தேதி மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்த நிலையில், ஜோர்டானில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது. தற்போது படக் குழுவினர் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ஆனாலும், இந்த தடை உத்தரவு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. எங்கள் குழுவில் மருத்துவர் ஒருவர் உள்ளார். எங்கள் அனைவருக்கும் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.
இந்த இக்கட்டான சூழலில் எங்கள் 58 நபர்களையும் தற்போது இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு முக்கியம் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் அரசுக்கும், நண்பர்களுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பதை அப்டேட் செய்வது எங்களின் கடமை என்று நினைக்கின்றேன்.
ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களின் வீடு திரும்ப காத்திருக்கின்றனர். அதற்கான நேரம் விரைவில் வரும் என்று நம்புகின்றேன்.
மேலும், இந்தியாவிற்குத் திரும்பி வர ஆவலாக இருக்கிறோம். விமானம் தான் இல்லை. எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எங்களைப் போலவே இன்னும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இங்கு விமானம் கிடைக்காமல் தவிப்பில் இருக்கிறார்கள் என உருக்கத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
#Aadujeevitham (Correction: Shoot permission was revoked on 27/03/2020. Sorry about the typo)