கொரோனா வீடியோ வெளியிட்ட ஜூலி! வழக்கம்போல் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம்!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாயிலாக அறிமுகமான ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அதன் மூலம் மக்களின் ஆதரவையும், வெறுப்பையும் பெற்றார். முதல் சீசனில் கலந்துகொண்ட அவரை, தற்போது 3 சீசன் முடிந்த பின்னும் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஜூலிக்கு விளம்பரங்கள், தொலைக்காட்சி தொகுப்பாளினி சில படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு என்று பிஸியாக இருந்தார். என்னதான் இன் ஜூலி அவரது வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும் நெட்டிசன்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை கலாய்த்து வருகின்றனர்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜூலி நாட்டு மக்களுக்காக அறிவுரை வழங்குகிறார் என்ற பெயரில் நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டிக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்ஒருவர் நல்ல பதிவுதான் அதை நல்ல துணி அணிந்து போடுங்கள் உங்கள் மேல் நல்ல மரியாதை வைத்துள்ளேன் என்று கமெண்ட் செய்துள்ளார்.