ஊரடங்கு சட்டம்- பிக்பாஸ் தர்ஷன் வீட்டில் இருந்து செய்யும் வேலை!

இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அனைவரும் விவாதிக்கும் மற்றும் அஞ்சும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான்.

கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபலங்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இருந்தப்படி பொழுதை கழித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற இலங்கை தர்ஷனின் முதலாவது படத்துக்கான படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்து வீடியோ கேம் விளையாடுகின்றார்.

இது குறித்த புகைப்படத்தினை அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு பிரபலங்களும் ரசிகர்களுக்கு முன் மாதிரியாக வீட்டில் இருந்து பொழுதை கழிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.