மனித மூளையின் சமிக்ஞைகளை எழுத்து வடிவில் மாற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

மனிதனின் குரல்வழி கட்டளைகளை இனங்கண்டு செயற்படக்கூடிய அல்லது பதில் அளிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப சாதனங்கள் ஏற்கணவே உருவாக்கப்பட்டுவிட்டன.

இவ்வாறான நிலையில் மனித மூளையில் ஏற்படுத்தப்படும் சமிக்ஞைகளை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு செயற்படக்கூடிய சாதனங்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தற்போது மூளையின் சமிக்ஞைகளை பெற்று அதனை எழுத்து வடிவில் மாற்றி தரக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மேலும் இச் சாதனமானது 97 சதவீதம் துல்லியமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.