வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிரடி மாற்றம்

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி ஏற்கணவே தரப்பட்டுள்ளமை தெரிந்ததே.

எனினும் ஸ்டேட்டஸ்களின் நேர அளவு முன்னர் 30 செக்கன்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இந்த நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது 15 செக்கன்கள் வரையே ஒரு ஸ்டேட்டஸினை வைக்க முடியும்.

இந்த வரையறையானது அன்ரோயிட் மற்றும் iOS பயனர்கள் இருவருக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் சேர்வரின் ட்ரபிக்கினை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக WABete தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை அப்லோட் செய்யக்கூடிய ஸ்டேட்டஸ் வீடியோக்களின் தரமும் விரைவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.