அவுஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கொரோனா தாக்கம்.!!

அவுஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கொரோனா தாக்கம் காரணமாக அந்த நாட்டு அரசாங்கம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி ஒரு குடும்பத்தில் இருந்து இருவருக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விளையாட்டு மைதானம், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோனாவினால் இதுவரை 18 பேர் பலியாகியதுடன், 4,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.