கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் நீடிப்பு!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஏப்ரல் 30ம் திகதி வரை நீடிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் மிக உயர்ந்த விகிதம் பதிவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதன் காரணமாக கட்டுப்பாடுகளை நீடிக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 142,735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2,488 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.