கனடாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இளவரசர் ஹரி-மேகன் தம்பதி!

அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் பாதுகாப்புக்கு பணம் செலுத்த முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நான் ராணி மற்றும் பிரித்தானியாவின் சிறந்த நண்பர் மற்றும் அபிமானி. பிரித்தானியாவை விட்டு வெளியேறிய ஹரி-மேகன் கனடாவில் நிரந்தரமாக வசிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்போது அவர்கள் கனடாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர், இருப்பினும், அமெரிக்கா அவர்களின் பாதுகாப்புக்கு பணம் செலுத்தாது. அவர்கள் தான் செலுத்த வேண்டும் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கனடாவை விட்டு வெளியேறிய ஹரி-மேகன் தம்பதி, மேகனின் சொந்த மாநிலமான கலிபோர்னியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் பொதுமக்களால் நிதியளிக்கப்பட்ட பாதுகாப்பை கேட்க எந்த திட்டமும் இல்லை என்று ஹரி-மேகன் தம்பதி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ஹரி-மேகன் தம்பதி மார்ச் 31 அன்று முறையாக மூத்த அரச குடும்ப உறுப்பினர் அந்தஸ்திலிருந்து விலகுவர், இனி ராணி சார்பாக அரச குடும்ப கடமைகளைச் செய்ய மாட்டார்கள், ஆனால் இந்த ஏற்பாடுகள் ஒரு வருடத்திற்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும்.

அரச குடும்ப அந்தஸ்திலிருந்து தம்பதிகள் விலக முடிவு செய்த நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு அளித்த வந்த பாதுகாப்பை கனடா அரசு நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.