இளையதளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா நிகழ்ச்சி பிரபல ரிவியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இவ்விழாவிற்கு நடிகர் விஜய் கருப்பு கோட் -ஷுட் அணிந்து கொண்டு ஸ்டைலாக வந்துள்ளார். சென்னை லீலா பேலஸில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு படக்குழுவினர் மற்றும் ஒரு சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் விஜய் மேடைக்கு வந்ததும், தனது தாய் மற்றும் தந்தையை கட்டிப்பிடித்து அன்பினை வெளிக்காட்டியுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் உடனே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த விழாவில் விஜய் பேசுகையில், பிகில் பட பிரச்சினையில் நிகழ்ந்த ஐடி ரெய்டு குறித்து எதுவும் கூறுவாரா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
எத்தனை பேர் என்ன மாதிரி குடும்பத்தோட..
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவ பார்த்துட்டு இருக்கீங்க ?
RT பண்ணுங்க
நண்பா ??#Master #MasterUpdate #MasterAudioLaunch pic.twitter.com/WlBHYtbc4N— ? R͢A͢S͢U͢K͢U͢T͢T͢Y͢ ?ₘₐₛₜₑᵣ (@Rasu4thalapathi) March 15, 2020







