தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களாக உடல் எடை கூடி மிக குண்டாக மாறினார். இதனால் கதாநாயகியாக நடிக்க இவரை யாரும் அணுகவில்லை என்ற ஒரு பேச்சு தமிழ் சினிமாவில் அடிபட்டது.
View this post on Instagram
இந்நிலையில், நித்யா மேனன் உடல் எடை குறைக்கும் வேளையில் இறங்கினார். தற்போது உடல் எடை குறைந்து மீண்டும் பழைய நித்யா மேனனாக, ஸ்லிம்மான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.