தர்ஷன் சனம் ஷெட்டி பிரேக்கப் குறித்து, முதன் முறையாக வாய்திறந்த ஷெரின்

கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான நபர்கள் முக்கியமான நபராக தர்ஷன் என்பவர் இருக்கிறார். இவர் இலைகையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பிக் பாஸ் இல்லத்தில் இருக்கும் நேரத்திலேயே தனக்கு காதலி இருக்கிறார் என்று கூறினார். மேலும், இவரது காதலியான சனம் ஷெட்டியும் தர்சன் குறித்து பேசினார்.

இந்த நிலையில், கடந்த சில மதத்திற்கு முன்னதாக சனம் ஷெட்டி தர்சனின் மீது காதலித்து நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய தர்சன் மறுப்பு தெரிவிக்கிறார் என்று கூறி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த விசயத்திற்கு பதில் அளித்த தர்சன், காதல் என்ற பெயரில் அவர் என்னை தொல்லை செய்கிறார். என்னை பிற போட்டியாளருடன் பழக விடவில்லை.

இவ்வாறு பல கண்டிஷன் என்னிடம் போட்டுவிட்டு, அவளது முன்னாள் ஆண் தோழர்களுடன் நைட் பார்ட்டியின் போது தங்கியிருந்தது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். ஆனால் இவர்களின் பிரிவிற்கு காரணமாக ஷெரின் முக்கிய காரணமாக இருந்தார் என்று விமர்சனமும் எழுந்தது. இதனால் பல சர்ச்சை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், அமைதிகாத்த ஷெரின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், யாருடைய தவறுக்கு என் மீது பழியை சுமத்துகிறீர்கள். இதனால் நான் கோபமடையவேண்டி இருந்தாலும் அமைதியாக இருக்கிறேன். என் அமைதியை வைத்து நான் பலவீனமானவன் என்று என்ன வேண்டாம். இந்த பிரச்சனைக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதால் பேசாமல் இருந்து வருகிறேன். இருவரின் காதல் முறிவை பெரிய விஷயமாக பார்க்காமல், உலகின் பல முக்கிய பிரச்சனை பாருங்கள்.. என்னிடம் இனிமேல் இது தொடர்பாக கேட்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.