தமிழில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த வி.ஐ.பி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன்.
மேலும் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானர் நடிகை சிம்ரன். இதன்பின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சிறந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், சென்ற வருடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கூட இவர் முதன் முறையாக டிக் டாக்கில் இணைத்துள்ளதாக அறிவித்திருந்தார், மேலும் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட டிக் டாக் வீடியோ மிக பெரிய அளவில் பார்வையாளர்களை பெற்றது.
இந்நிலையில் தான் செய்த டிக் டாக் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன். இதனை பார்த்த பலரும் 43 வயதாகும் நடிகை சிம்ரனா இது, என்று வாயடைத்து போய் கேட்டு வருகின்றனர்.
#MaiAurMeriKHWAISHEIN is my new stress buster!
What is yours?#simran #simranandsons #musicvideo #musiclover #musiclife #musicvideoshoot #photography #newyork #artist #youtube #viral #lyrics #singer #dance #musicproducers #costumes #styling #artist pic.twitter.com/ppLKU8amNh
— Simran (@SimranbaggaOffc) March 12, 2020







