தமிழ் சினிமாவில் சிலம்பாட்டம் மூல தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனா கான். கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி சிம்பு படத்திற்கு பிறது படவாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகி நடிக்க துவங்கினார்.
பாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்று தான் காதலித்து வந்தவன் ஏமாற்றிவிட்டான் என்று பேட்டியும் கொடுக்க ஆரம்பித்தார்.
தன்னை ஏமாற்றி பல பெண்களுடன் தகாத உறவில் இருக்கிறார் என்றும், கழுத்தை நெறித்து சித்ரவதை செய்தார் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினா சனா கான். தற்போது இது குறித்து அவரது காதலன் மெல்வின் லூயின் அவரது சமுகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் என்னுடைய பப்ளிசிட்டிற்க்காக இவ்வாறு உன்னை பற்றி கூறி வருகிறேன் என்று அப்பட்டமாக கூறியுள்ளார் சனா கான். இதனால் நடிகை சனா கானின் உண்மை முகம் இதுதான் என்று கூறி ஆடியோ வீடியோவை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் மெல்வின்.







